மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி
30-Aug-2025
மேட்டுப்பாளையம்; ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் மயில்சாமி, 28, தினேஷ், 26. கூலி தொழிலாளிகள். இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே எம். கவுண்டம்பாளையம் பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும்போது வளைவில் நிலைதடுமாறி எதிரே வந்த மொபட்டில் மோதி, தொடர்ந்து காரின் மீதும் மோதினர். இதில் மொபட்டில் வந்த கருப்பசாமிக்கு, 60, கால் முறிவு ஏற்பட்டது. பைக்கில் வந்த மயில்சாமி, தினேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மயில்சாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தினேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமுகை போலீசார் விசா ரிக்கின்றனர்.
30-Aug-2025