உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

போலீஸ் வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

சிங்கம்புணரி : கோவையை சேர்ந்த முருகானந்தம் மகன் ராஜேஷ்குமார் 19. மெக்கானிக்கான இவர் தன் உறவினர் கல்வெட்டுமேடு குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் நவீன்குமாருடன் 20, புதுக்கோட்டை அருகே ஆராங்கல்லில் உள்ள அம்மாச்சி வீட்டிற்குச் சென்றார். பிறகு நேற்று சிங்கம்புணரி அருகேவுள்ள கரடிப்பட்டிக்கு டூவீலரில் இருவரும் சென்றனர்.எஸ்.எஸ்.கோட்டை சோதனைச்சாவடி அருகே எதிரே விருதுநகரில் முதல்வர் பாதுகாப்பிற்குச் சென்று விட்டு நாகப்பட்டினம் நோக்கி சென்ற போலீஸ் வேன் மீது டூவீலர் மோதியது. இதில் இருவரும் பலத்த காயங்களுடன் திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ராஜேஷ்குமார் இறந்தார். நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ