உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை விபத்தில் இளைஞர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி

கோவை,; சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. நேற்று முன்தினம், கார்த்திகேயன் தனது இரு சக்கர வாகனத்தில், சரவணம்பட்டி - காளப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிர்திசையில் வேகமாக வந்த கார் ஒன்று, கார்த்திகேயன் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட கார்த்திகேயன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், கார்த்திகேயனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி