உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர்களுக்கு நிர்வாகத்திறமை அவசியம்: போலீஸ் கமிஷனர் அறிவுரை

இளைஞர்களுக்கு நிர்வாகத்திறமை அவசியம்: போலீஸ் கமிஷனர் அறிவுரை

கோவை:''இளைஞர்கள் நிர்வாகத்திறமை வளர்த்துக்கொள்வது அவசியம்,'' என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார்.கோவை விழாவின் ஒரு பகுதியாக 'பிகம் ஒன் டே' என்ற தலைப்பில் கருத்தரங்கு சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி அரங்கில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:இப்பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்.,க்கு தயாராகும் மாணவ, மாணவியர் பலர் அன்றாடம் நாம் சமூகத்தில் சந்திக்கும் பல பிரச்னைகளை குறிப்பிட்டதோடு, அதற்கான தீர்வையும் சொல்லி அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.இளைஞர்களே இந்தியாவின் எதிர்காலம். இந்நிகழ்ச்சி இன்றைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தி அரசு நிர்வாகத்துறையில், அரசாங்கத்தின் துாண்களாக மாற்றுவதில் பங்கு வகிக்கிறது. இளைஞர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர்.நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். நமக்கான உரிமைகளை பற்றி தெரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல் இளையதலைமுறையினர் தாமாக முன் வந்து பிரச்னைகளை கையாள வேண்டும். நிர்வாகத்திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம்.இவ்வாறு, பாலகிருஷ்ணன் பேசினார்.இந்நிகழ்ச்சியில் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் சென்னை தலைமை நிர்வாகி சந்திரசேகர், கோவை கிளை தலைவர் ஆர்.எஸ்.அருண் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை