உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் துவக்க விழா

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., முருகுமாறன் துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்விக் குழு உறுப்பினர் பாண்டியன், கண்ணன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பவானி வரவேற்றார். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி பேசுகையில், 'ஆதிதிராவிட மாணவர்கள் மற்றும் மக்களின் மீது முதல்வர் ஜெயலலிதா அதிக அக்கறை கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார். 104 கோடி ரூபாய் சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளில் முன்னேற வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி