உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒருவழிப்பாதையை திறக்க ரயில்வே அதிகாரிக்கு மனு

ஒருவழிப்பாதையை திறக்க ரயில்வே அதிகாரிக்கு மனு

கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் ஒருவழிப்பாதையில் ஏற்படுத்திய தடையை ரயில்வே நிர்வாகம் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன், ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: கடலூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நகரமாக உள்ளது. நகரின் மையப்பகுதியான திருப்பாதிரிப்புலியூரில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளதால் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதனை தவிர்க்க லாரன்ஸ் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் தேரடி தெரு, ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன.

இது ஓரளவு போக்குவரத்து நெரிசலை தவிர்த்தது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் ஒரு வழிப்பாதையை தண்டவாளம் நட்டு தடை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லாரன்ஸ் ரோட்டில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஒருவழிப்பாதையில் ஏற்படுத்திய தடையை உடனடியாக அகற்றி, லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் வரை ஒரு வழிப்பாதை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை