உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் சிக்கிய மருத்துவர் ஹைவே பேட்ரோல் போலீசார் மீட்பு

விபத்தில் சிக்கிய மருத்துவர் ஹைவே பேட்ரோல் போலீசார் மீட்பு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே கார், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிருக்கு போராடிய கால்நடை மருத்துவரை ஹைவே பேட்ரோல் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு குமார உடைப்பு வாய்க்கால் பாலத்தின் அருகே வடலுாரிலிருந்து வந்த இருசக்கர வாகனமும், சேத்தியாத்தோப்பிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.இருசக்கர வாகனத்தில் வந்த கால்நடை மருத்துவர் கலைச்செல்வன்,29; தலையில் அடிப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.அப்போது ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முத்து, சிறப்பு படை போலீஸ் சின்ராசு ஆகியோர் கலை செல்வனை மீட்டு வாகனத்தில் ஏற்றி சென்று 15 நிமிடத்திற்குள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை