உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு கோலம்

100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு கோலம்

கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கடலுார் தாலுகா அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக வண்ண கோலமிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயா தலைமை தாங்கி, விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார். தாசில்தார் பலராமன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்திரன் முன்னிலை வகித்தனர். 100 சதவீதம் ஓட்டளிப்போம், எனது ஓட்டு, எனது உரிமை என்பது விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. பின், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ