உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 முதியவர்கள் தற்கொலை

2 முதியவர்கள் தற்கொலை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, வயிற்று வலி கொடுமையால் வெவ்வேறு இடங்களில் இரு முதியவர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் அப்பாதுரை, 72; விவசாயி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. நேற்று வலி அதிகமானதால், பூச்சி மருந்தை குடித்து அப்பாதுரை இறந்தார்.அதே போன்று, நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் அய்யனார், 60; விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததால் மனம் வெறுத்து பூச்சி மருந்து குடித்து இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ