மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
02-Mar-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற நால்வர் மீது வழக்குப் பதிந்த போலீசார், இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜா, அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று கோபுராபுரம், வி.குமாரமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரிகளை சோதனை செய்தபோது, அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரத், 21; சதீஷ்குமார், 28; பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த வசந்த், இன்பநாதன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
02-Mar-2025