லாரி மோதி 3 ஆடுகள் பலி
பெண்ணாடம் : சிமென்ட் லோடு லாரி மோதியதில் 3 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி, திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் முகமதுஅலி, 40. கூலி தொழிலாளி. 8 வெள்ளாடுகள் வளர்க்கிறார். நேற்று அதே பகுதியில் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். மழை பெய்ததால் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆடுகள் ஒதுங்கின.அப்போது, 3 ஆடுகள் மட்டும் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தபோது அவ்வழியே சிமென்ட் ஆலையில் இருந்து வந்த லோடு லாரி, ஆடுகள் மீது மோதியதில், 3 ஆடுகள் இறந்தன.பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து விசாரிக்கின்றனர்.