உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு 3 பேர் காயம்

முன்விரோத தகராறு 3 பேர் காயம்

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக மூவரை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கணேசமூர்த்தி, இவரது உறவினர்கள் நித்தீஷ்குமார், பாலாஜி ஆகியோர் கொடுக்கன்பாளையம் வீரன்கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அங்கு வந்த ராஜேஷ், 23; சதீஷ், 21; சந்திரகாசன்,35; ஆகியு மூவரும், முன்விரோதத்தில், அவர்களை தாக்கினர்.இதில் கணேசமூர்த்தி, நித்தீஷ்குமார், பாலாஜி மூவரும் பலத்த காயமடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார், ராஜேஷ் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை