மேலும் செய்திகள்
ரூ.16,400 கோடி சொத்து மீட்டு தந்த அமலாக்கத்துறை
10-Sep-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதியில் காணாமல் போன 5 மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.பெண்ணாடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சில மாதங்களாக மொபைல் போன்கள் காணாமல் போனதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, எஸ்.பி., உத்தரவின்படி, 'சைபர் க்ரைம்' போலீசார் காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்ணாடம் பகுதியில் காணாமல் போன மொபைல்களை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பயன்படுத்தி வருவது தெரிந்தது.அதைத்தொடர்ந்து, மொபைல் காணாமல் போன பெண்ணாடம் அடுத்த செம்பேரி அருண்பாண்டியன், கோனூர் கிருத்திகா, இறையூர் ஆனந்தி, பெண்ணாடம், நரிக்குறவர் தெரு வேல்முருகன், அரியலுார் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்துார் சதீஷ் ஆகியோர்களது மொபைல் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.
10-Sep-2024