கடலுாரில் 6 புதிய பஸ்கள்; அமைச்சர் துவக்கி வைப்பு
கடலுார் : கடலுாரில் அரசு போக்குவரத்து கழகத்தில் 6 புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 7,000 புதிய பஸ்கள் வாங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக கடலுார் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு 64 புதிய பஸ்கள் வழங்கப்பட்டன. இதனை மாவட்டத்தில் 8 அரசு போக்குவரத்து கழக டெப்போக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. கடலுார் டெப்போவில் பழனி, மதுரை, கிளாம்பாக்கம், வேலுார், சேலம் வழித்தடத்தில் 6 புதிய பஸ்கள் இயக்கும் நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடந்தது.அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், போக்கு வரத்து கழக கடலுார் பொது மேலாளர் ராகவன், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.