பயணிகள் நிழற்குடை இன்றி 6 கிராம மக்கள் அவதி
நடுவீரப்பட்டு; பண்ருட்டி-கடலுார் சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டியிலிருந்து பாலுார் வழியாக கடலுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள நரிமேடு, பாலுார், குயிலாப்பாளையம், அருங்குணம், வானமாதேவி, திருமாணிக்குழி ஆகிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை.இந்த பஸ்நிறுத்தங்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுபகுதியில் உள்ள கிராம மக்களும் வந்து பஸ் ஏறி வெளியூர் செல்கின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழைகாலத்தில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் இந்த கிராம பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.