உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஞ்சு குடோனில் தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு

பஞ்சு குடோனில் தீ விபத்து விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பஞ்சு குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் ஆயியார்மட தெருவைச் சேர்ந்தவர் மணி. இவர் அதேபகுதியில் பஞ்சு குடோன் வைத்துள்ளார். இவரது பஞ்சு குடோனில், நேற்று மாலை மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சென்றனர்.அப்போது, சாலையின் நடுவே மின் கம்பம் மற்றும் வாகனங்கள் வழியில் நிறுத்தப்பட்டிருந்ததால், தீ விபத்து பரவிய பஞ்சு குடோன் பகுதிக்கு தீயணைப்பு வாகனத்தை எடுத்து செல்ல முடியவில்லை. இதன்காரணமாக, அப்பகுதி மக்களே குடோனில் பரவிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை