உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நள்ளிரவில் தீப்பிடித்த வீடு; குழந்தைகளுடன் தப்பிய பெண்

நள்ளிரவில் தீப்பிடித்த வீடு; குழந்தைகளுடன் தப்பிய பெண்

காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ராஜேந்திரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்,38. கட்டட தொழிலாளி. வேலை சம்பந்தமாக இவர் வெளியூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு, குழந்தைகளுடன் இவரது மனைவி வினோதினி,32, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. துாங்கிக்கொண்டிருந்த வினோதினி எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். கூச்சலிட்டபடி தன் குழந்தைகளை மீட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து தப்பினார். வினோதினின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெளியே வந்து தீயை அணைக்க முயன்றனர்.தகவலறிந்த காட்டுமன்னர்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவதற்கும் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த கட்டில், டிவி, பிரிட்ஜ், உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தது. காட்டுமன்னார்கோவில் அருகே சரியான நேரத்தில் கண்விழித்ததால் குழந்தைகளை காப்பாற்றி தாய் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ