உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆதார் சிறப்பு முகாம்

ஆதார் சிறப்பு முகாம்

வடலுார்: வடலுார் நகராட்சி மற்றும் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் பார்வதிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது.நகராட்சி சேர்மன் சிவக்குமார் தலைமை தாங்கினார். கடலூர் அஞ்சல் ஆய்வாளர் வடிவேலன், வட்டார மருத்துவ அலுவலர் அகிலா, வடலூர் தி.மு.க., நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். முகாமில் புதியதாக ஆதார் எடுத்தல், திருத்தம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மாற்றம், சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மோகன பிரியதர்ஷினி, போஸ்ட் மாஸ்டர் பரிமளா, கவுன்சிலர்கள் ராஜபூபதி, முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை