மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி
29-Aug-2024
கோவை மதர்லேண்ட் பள்ளி ஏற்பாடு
02-Aug-2024
கடலுார்: கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் குறுவட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வளைய பந்து போட்டியில் இரட்டையர் பிரிவில் ஜெயபிரகாஷ், ஹரிஷ் முதலிடம் மற்றும் ஒற்றையர் பிரிவில் ஹரிஷ் முதலிடம் பெற்றனர்.கடற்கரை கையுந்துபந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் விஷ்ணு மற்றும் கோபி முதலிடம் பெற்றனர். 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் வளையபந்து போட்டியில் விஷ்ணுபிரியா முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார் பாராட்டினர். பள்ளி முதல்வர் உதயகுமார்சாம் முன்னிலை வகித்தார். இம்மாணவ, மாணவியர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
29-Aug-2024
02-Aug-2024