மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
27-Aug-2024
விருத்தாசலம்: அ.தி.மு.க., பிரமுகரை பீர் பாட்டிலால் குத்திய பா.ஜ., - தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,55; அ.தி.மு.க., பிரமுகர். இவருக்கும் எம்.அகரம் கிராமத்தை சேர்ந்த அசோக் என்பருக்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், கடந்த 26ம் தேதி, கோனாங்குப்பத்தில் இருந்து மங்கலம்பேட்டைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை, கர்ணத்தம் அருகே அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ., தமிழ்செல்வன், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருஞானம் ஆகியோர் வழிமறித்து திட்டி, பீர் பாட்டிலால் தாக்கினர். அதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் ராதாகிருஷ்ணனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அசோக், தமிழ்ச்செல்வன், திருஞானம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
27-Aug-2024