உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க., இளைஞரணி பிரசாரம்

தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க., இளைஞரணி பிரசாரம்

கடலுார், : கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர். கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து லாரன்ஸ்ரோடு உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் பிரசாரம் நடந்தது. எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, ஓட்டு சேகரித்தார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதிகள் மணி, ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் புஷ்பநாதன், முத்துக்குமரன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ரவி, முரளிதரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணி முருகன், வினோத், மாநகர நிர்வாகிகள் பாபு, ராஜி, அசோகன், சுந்தரம், முருகையன் மற்றும் தே.மு.தி.க., மாநகர செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் சித்தானந்தம், ஒன்றிய செயலாளர் கலாநிதி, தலைவர் பக்கிரி, தருமபாலன், கவியரசன் உட்பட பலர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ