உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாதவர் ரயில் மோதி பலி

அடையாளம் தெரியாதவர் ரயில் மோதி பலி

விருத்தாசலம், : அரியலுார் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத ஆண் பலியானது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரியலுார் மாவட்டம், மாத்துார் - செந்துறை ரயில் நிலையத்திற்கு இடையே, மணப்பத்துார் கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில், நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.வெள்ளை நிற பூ போட்ட சட்டை, நீல நிற கைலி அணிந்திருந்தார். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பற்றிய தகவல் தெரிந்தால், 9498101987, 9498138462 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு, இருப்பு பாதை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !