உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி அருகே பழங்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே பழங்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

பண்ருட்டி,: பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் சோழர்கால கலை அமைப்பு கொண்ட சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கூறியதாவது :கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கில் மண் அரிப்பு ஏற்பட்டு பூமியில் புதைந்து இருந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் கண்டெடுக்கப்பட்டது.கண்டறிந்த சுடுமண் பொம்மை குழந்தை தாயிடம் பால் அருந்துவதுபோல் உள்ளது. உயரம் 12.5செ.மீ. உயரமும். 8 செ.மீ. அகலமும் கொண்டவையாகும். ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலில் பூதகியிடம் பால் குடிக்கும் குழந்தை கண்ணனின் புராணத்தை நினைவுபடுத்துகிறது. இச்சுடுமண் உருவம். அந்தப் பெண்ணின் உருவமும் அரக்கியின் வடிவத்தையே ஒத்துள்ளது என்றார். ஏற்கனவே சோழர் காலத்தை சேர்ந்த விநாயகர் சுடுமண் சிற்பம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பகுதியில் கண்டறியப்பட்டது. ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககாலம் முதல் சோழர்கால வரை மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை