உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி படைவீரர் மாளிகையில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

மாஜி படைவீரர் மாளிகையில் காலி பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

கடலுார் : கடலுார் மாவட்ட படைவீரர் மாளிகையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட படைவீரர் மாளிகையில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் துப்புரவாளர் (தற்காலிக) பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதால் எந்தவித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்படும். முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவு செய்துள்ள 55 வயதிற்குட்பட்ட கடலுார் மற்றும் அதனைச் சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் வரும் 15 நாட்களுக்குள் கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இப்பணியின் பொறுப்பு விவரங்கள் தெரிந்துகொள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை