| ADDED : ஜூன் 15, 2024 05:58 AM
கடலுார்: கடலுாரில் உள்ள செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியை ஏஞ்சலின் வசந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுாரில் செவித்திறன் குறையுடையோர் சிறப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, சிறப்பு கல்வி, உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை கீழ் செயல்படும் இப்பள்ளிகளில் 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இரு பள்ளிகளிலும் 2024-2025ம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி, நெல்லிக்குப்பம் ரோடு, வில்வநகர், கடலுார் என்ற முகவரியில், 9442526871, 04142-210635 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.