உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திட்டக்குடி : திட்டக்குடியில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், கடலுார் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி துணை சேர்மன் பரமகுரு தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் கதிரவன், மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், தலைமை மருத்துவர் சேபானந்தம் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.நம்பிக்கை மைய ஆலோசகர் தொல்காப்பியன், இந்திரன், ஆய்வக நுட்புநர்கள் குமார், ஹரிபாஸ்கர், களப்பணியாளர் ஜான்சிராணி உட்பட பலர் பங்கேற்றனர்.திட்டக்குடி நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை