உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிள்ளை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம்

கிள்ளை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம்

கிள்ளை : கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருளர் மாணவர்களை அதிகளவில் சேர்க்க வலியுறுத்தி நடந்த ஊர்வலத்தை, கிள்ளை பேரூராட்சி சேர்மன் மல்லிகா துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குமாரவேல் வரவேற்றார்.பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மகாலட்சுமி, சத்தியநாராயணன், ராஜசெல்வம், சரண்யா மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ