உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக பாலாலயம்

வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக பாலாலயம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி துவங்குவதற்கான பாலாலயம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், 2ம் நிலை ராஜகோபுரம், மூலவர் கோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகள் விமானங்கள் புனரமைப்பு பணிக்காக அறநிலையத்துறை சார்பில் 1.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கி நடைபெற உள்ளது. இதற்கான பாலாலயம் நேற்று நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் 11ம் தேதி காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, 10:30 மணிக்கு வாஸ்துசாந்தி, மாலை 5:00 மணிக்கு ராஜகோபுரம், சுவாமி, அம்மன் விமானம், பரிவார விமானங்கள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று 12ம் தேதி காலை 5:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 7:00 மணிக்கு மகா தீபாராதனை, 7:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, காலை 8:00 மணிக்கு விமான பாலாலய கும்பாபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ