உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரோட்டரி கிளப் ஆப் சங்கமம் காமராஜர் பிறந்த நாள்

ரோட்டரி கிளப் ஆப் சங்கமம் காமராஜர் பிறந்த நாள்

கடலுார்: கடலுார் புதுநகர் துாய தாவீது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியை பாமினி தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் நாராயணசாமி, செயலாளர் கார்த்தீசன், முன்னாள் துணை ஆளுநர் வேல்முருகன் மற்றும் சன்பிரைட் பிரகாஷ் சிறப்புரையாற்றினர். இதில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மோகன், முருகன், இளங்கோ, ரவிக்குமார், பிரதீப், பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி