பிராமணர் சங்க கூட்டம்
கடலுார் : கடலுாரில் தமிழ்நாடு பிராமணர் சங்க கூத்தப்பாக்கம் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரணதார்த்திஹரன் வரவேற்றார். பொருளாளர் கணேசன், துணைத் தலைவர் ராஜகோபாலன், சங்கரன், அமைப்பு செயலாளர் சம்பத், உறுப்பினர்கள் வெங்கட்ராமன், லட்சுமி நாராயணன் பேசினர். வரும் 14ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.பக்தவச்சலம், விஜயராகவன், செல்வி, ராதாகிருஷ்ணன், சந்திரமவுலி, அலமேலு, சித்ரா, லட்சுமி பங்கேற்றனர். இணை செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.