உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச மனைப்பட்டாவுக்கு லஞ்சம்; ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

இலவச மனைப்பட்டாவுக்கு லஞ்சம்; ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இலவச மனைப்பட்டா வழங்க லஞ்சம் பெறுவதை கண்டித்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் சமத்துவபுரத்தில் இலவச மனைப்பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு நடக்கிறது. நிலம் இல்லாத ஏழை மக்கள் மனைப்பட்டா கோரி விண்ணப்பித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள சில அரசியல் பிரமுகர்கள் 3 சென்ட் நிலம் பெற ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.இதனை கண்டித்து கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 11:30 மணிக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு, குமாரமங்கலம் வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கக் கோரி துண்டு பிரசுரம் வினியோகித்தனர். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் பேச்சுவார்த்தை நடத்தினார்.தகுதியான நபர்களுக்கு மனைப்பட்டா வழங்கவும், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். முற்றுகை சம்பவத்தால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை