மனைவி, மருமகளால் தீ வைக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி சாவு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அருகே குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் மருமகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் காயமடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மந்தாரக்குப்பம் அடுத்த பழைய நெய்வேலியை சேர்ந்தவர் சரவணன், 52; சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து கடந்த 10ம் தேதி வீட்டிற்கு வந்த சரவணனுக்கும், அவரது மனைவி தமிழரசிக்கும், குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தமிழரசி மற்றும் அவரது மருமகள் மணிமேகலை ஆகியோர் வீட்டில் இருந்த பெட்ரோலை சரவணன் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் தீக்காயமடைந்த சரவணன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் இறந்தார்.மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தமிழரசி, மணிமேகலை ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.