உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சம்பளம் தராத அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது

சம்பளம் தராத அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வமணி, 54; கட்டட மேஸ்திரி. இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தி மகன் சுப்ரமணியன்,43, கொத்தனார் வேலை செய்தார். சம்பள பாக்கி குறித்து சுப்ரமணியன் கேட்டதற்கு, செல்வமணி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுப்ரமணியன், தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவரையும் சமாதானம் செய்ய செல்வமணி, அங்கு சென்றார். ஆத்திரமடைந்த சுப்ரமணியன், செல்வமணியின் முதுகில் கத்தியால் குத்தினார்; சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.விருத்தாசலம் போலீசார், செல்வமணியின் உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்ரமணியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை