உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாணிக்கமூர்த்தி விளக்க உரையாற்றினார்.மாவட்டத் தலைவர் மேகநாதன், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரராஜ், உதவிச் செயலாளர் விஜய் ஆனந்த் கண்டன உரையாற்றினர். பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில் பயன்படாத பொருட்களை ஏலம் விட்டு வருவாயை பெருக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை