மேலும் செய்திகள்
ஆன்லைன் லாட்டரி விற்பனை: மூவர் கைது
19-Aug-2024
புவனகிரி: புவனகிரியில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி பெருமாத்துாரை சேர்ந்தவர் உமாவதி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், சென்னையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டில் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில்திருடு போன பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19-Aug-2024