உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் போலீசில் மனுக்களுக்கு தீர்வு முகாம்

நெல்லிக்குப்பம் போலீசில் மனுக்களுக்கு தீர்வு முகாம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில், பொதுமக்கள் மனுக்கள் மீதான தீர்வு காண முகாம் நடத்தப்பட்டது.கடலுார் மாவட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவை புகார்கள் மீது தீர்வு காண, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பு முகாம் நடத்த எஸ்பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.அதன்படி நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையங்கள் சார்பில், நெல்லிக்குப்பம் தனியார் மண்டபத்தில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு மனு தீர்வுநாள் முகாம் நடத்தப்பட்டது. அதில் நிலுவையில் இருந்த 150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. எஸ்.ஐ., தெய்வநாயகம், சிறப்பு எஸ்.ஐ.க்கள் சக்திவேல், கந்தன், எழுத்தர் ஏழுமலை கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை