பைக் மீது கார் மோதல்; வாலிபர் பரிதாப பலி
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.பெண்ணாடம் அடுத்த அகரம் சத்தியநாதன் மகன் தினேஷ், 33. வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று காலை மங்கலம்பேட்டைக்கு வேலைக்கு சென்றுவிட்டு, இரவு 8:00 மணியளவில், தனது பல்சர் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.ரூபநாராயணநல்லுார் அருகே வந்தபோது, விருத்தாசலத்தில் இருந்து வந்த டாடா கார் நேருக்கு நேர் மோதியதில், தினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் சென்று, தினேஷ் சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.