உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு திருமண ஏற்பாடு 5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமண ஏற்பாடு 5 பேர் மீது வழக்கு

புவனகிரி: புவனகிரி மருதுார் அருகே சிறுமிக்கு திருண ஏற்பாடு செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோவிலில், 17 வயது சிறுமி ஒருவருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த பிரபு, 29; என்பவருக்கும், திருமணம் நடத்த இரு வீட்டார் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அதையடுத்து, மேல்புவனகிரி ஒன்றிய ஊர்நல அலுவலர் பஞ்சவர்னம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு மருதுார் போலீசாருடன் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது தெரியவந்தது. அதையடுத்து, திருமணத்தை நிறுத்தி, சிறுமியை மீட்டு கடலுாரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.இதுகுறித்து ஊர்நல அலுவலர் அளித்த புகாரில், மணமகன் பிரபு உட்பட திருமண ஏற்பாடு செய்த 5 பேர் மீது, மருதுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை