மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
10-Feb-2025
விருத்தாசலம் : அனுமதியின்றி கூழாங் கற்களை சலித்து விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப் போது, நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்ன தம்பி மகன் கோபாலகிருஷ்ணன், ரத்தினசாமி மகன் சிகாமணி இருவரும் அனுமதியின்றி சொந்த நிலத்தில் இருந்து கூழாங்கற்களை எடுத்து, சலித்து விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர்.அங்கிருந்த தலா 2 யூனிட் கூழாங்கற்களை பறிமுதல் செய்த போலீசார், கோபாலகிருஷ்ணன், சிகாமணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
10-Feb-2025