உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியையிடம் செயின் பறிப்பு; சிதம்பரம் அருகே துணிகரம்

ஆசிரியையிடம் செயின் பறிப்பு; சிதம்பரம் அருகே துணிகரம்

சிதம்பரம் : ஆசிரியையிடம் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம், தேரடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிபிள்ளை மனைவி ரம்யாதேவி,42; கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர். இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து, சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் உள்ள சாலியன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ரம்யாதேவி அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ