உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வதேச சிலம்பம் போட்டியில் சிதம்பரம் மாணவர்கள் சாதனை

சர்வதேச சிலம்பம் போட்டியில் சிதம்பரம் மாணவர்கள் சாதனை

சிதம்பரம்: கோவாவில், சர்வதேச சிலம்பம் போட்டி கடந்த 25 மற்றும் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 பேர் பங்கேற்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 150 பேரும் போட்டியில் பங்கேற்றனர். இதில் கடலுார் மாவட்டம், சிதம்பரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 12 பேர் பங்கேற்றதில், 7 மாணவர்கள் தங்க பதக்கம், 5 மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.பயிற்சி ஆசிரியர் உத்திராபதி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றி பெற்று, நேற்று முன்தினம் சிதம்பரம் வருகை தந்த சிலம்ப மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை