உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் பல்கலையில் தேசிய நுாலகர் தின விழா

சிதம்பரம் பல்கலையில் தேசிய நுாலகர் தின விழா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய நுாலகர் தின விழா நடந்தது.பல்கலைகழக சி.பி. ராமசாமி அய்யர் மைய நூலகம், சார்பில் தேசிய நூலகர் தினம் விழா நடந்தது. விழாவிற்கு இந்திய மொழிப்புல முதல்வர் பாரி, கல்வியல் மொழிப்புல முதல்வர் குலசேகர பெருமாள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய பல்கலைககழக புல முதல்வர் ரவி பங்கேற்று பேசினார். பலகலைக்கழக பேராசிரியர்கள் விஜயகுமார், பிரவினா, முத்துக்குமார், ராஜ்குமார், கல்பனா, நீலகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மைய நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை நூலகர் சிவராமன், துணை நூலகர் பாலகிருஷணன், மற்றும் ஜெகன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி