உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பண்ருட்டி,: அண்ணாகிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.முகாமிற்கு, தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆத்ம குழு தலைவர் வெங்கட்ராமன் துவக்கி வைத்து மனுக்களைப் பெற்றார். சிறப்பு அழைப்பாளர் கடலுார் எம்.பி.விஷ்ணு பிரசாத் பங்கேற்றார். முகாமில், பொதுமக்களிடமிருந்து பட்டா, ரேஷன்கார்டு, வீடு, சாலை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து 1200 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில், தாசில்தார் பிரகாஷ், பி.டி.ஓ.,க்கள் முருகன், ரவிசந்திரன், துணை தாசில்தார்கள் வேளாண் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை