உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் விழா பாதுகாப்பு ஏற்பாடு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஆய்வு

முதல்வர் விழா பாதுகாப்பு ஏற்பாடு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஆய்வு

கடலுார்: கடலுாரில் முதல்வர் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., நேரில் ஆய்வு மேற்கொண்டார்.கடலுார் மாவட்டத்தில் வரும் 21,22ம் தேதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அதையொட்டி மைதானம் சீரமைக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,திஷா மித்தல், மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வு செய்தார். விழா மேடை மற்றும் முதல்வர் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமார், டி.எஸ்.பி.,ரூபன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை