மேலும் செய்திகள்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
18-Aug-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.இறையூர் ஊராட்சி தலைவர் சுதா ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி துணை கலெக்டர் சங்கர் பங்கேற்று, அரசின் சாதனைகள் குறித்து பேசி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி, சமூக நலம், சுகாதாரம், வேளாண்மை, தோட்டக்கலை உட்பட 15 துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் சவுந்திரசோழபுரம் நடேசன், துறையூர் அமுதா ராயதுரை, கொசப்பள்ளம் தர்மராஜ், தொளார் அருள்மணி, கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், இறையூர், பெ.பொன்னேரி, தொளார், மாளிகைக்கோட்டம், கொசப்பள்ளம், துறையூர் உட்பட 8 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், திருத்தம், மருத்துவ காப்பீடு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
18-Aug-2024