மேலும் செய்திகள்
திருமாவளவன் பிறந்த நாள்
19-Aug-2024
கடலுார் : கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுநல அமைப்பினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாநகராட்சியில் நேற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில், கடலுார் புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுார் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். வெண்புறா பொதுநல பேரவை தலைவர் சண்முகம், தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் செல்வம், பஸ் நிலைய சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார், ேஷர் ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர் சங்க தலைவர் ராயர் ராஜங்கம் முன்னிலை வகித்தனர். இதில், புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
19-Aug-2024