உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருத்துறையூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருத்துறையூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.க்கள் முருகன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அண்ணாகிராமம் ஒன்றிய ஆத்ம குழு தலைவர் வெங்கட்ராமன் முகாமினை துவக்கி வைத்தார்.இதில் துணை தாசில்தார்கள் கிருஷ்ணா, பாலமுருகன், தேவநாதன், துணை பி.டி.ஓ. திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முகாமில் பொதுமக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, புதிய வீடுகள் வழங்கும் திட்டம் ஆகியவை உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.1,160 மனுக்கள் பெற்று அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 21 கர்ப்பணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பில் கிட் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி