உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி; கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி; கலெக்டர் திடீர் ஆய்வு

கிள்ளை : கிள்ளை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 90 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.கிள்ளை அடுத்த கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய கட்டட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மாணவர்களின் நலன்கருதி, தமிழக அரசு மாவட்ட கனிமவள நிதியின் கீழ், ரூ. 90 லட்சம் மதிப்பில் பள்ளியில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது குறித்தும், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், செயற்பொறியாளர் பிரமிளா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி