உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு சேவை பணி ஆய்வுக் கூட்டம்

கூட்டுறவு சேவை பணி ஆய்வுக் கூட்டம்

கடலுார்: கடலுாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கான பல்நோக்கு கூட்டுறவு சேவைகள் மற்றும் கடன் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான பணி திறனாய்வு கூட்டம் நடந்தது.மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'நஷ்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பயிர் கடன், நகைக் கடன், கால்நடை வளர்ப்பு, தானிய ஈட்டுக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கடன் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்து கடன் வழங்க வேண்டும்' என்றார்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் கோமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், சரக துணை பதிவாளர்கள் கடலுார் துரைசாமி, விருத்தாசலம் சவிதா, சிதம்பரம் ரங்கநாதன், டான்பெட் துணைப் பதிவாளர் வைரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை