உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சை பாத்திரத்துடன் வந்த கவுன்சிலர் நல்லுார் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு

பிச்சை பாத்திரத்துடன் வந்த கவுன்சிலர் நல்லுார் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு

வேப்பூர், : நல்லுார் ஒன்றியக்குழு கூட்டத்தில், கவுன்சிலர் பிச்சை பாத்திரத்துடன் வந்து, கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., முருகன், துணை பி.டி.ஓ..,க்கள், பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துகண்ணு, சிவக்குமார், பத்மாவதி, பச்சமுத்து, முத்து, மனோகரன், மேகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.பகல் 12:00 மணியளவில் கூட்டம் துவங்கி தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது, 7வது வார்டு கவுன்சிலர் சிவக்குமார், கையில் பிச்சை பாத்திரம் எந்திக்கொண்டு, தனது வார்டு பகுதிகளுக்கு திட்டப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய கோரினார். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக எப்படி தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு செய்து சுயேச்சை கவுன்சிலர்களை ஏமாற்றி வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சேர்மன் மற்றும் துணை சேர்மன், கூட்டத்தை விட்டு வெளியேறினர். இச்சம்பவத்தால் கூட்டத்தில் சற்று பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ